மோட்டார் சைக்கிள்கள் மோதி 3 பேர் படுகாயம்


மோட்டார் சைக்கிள்கள் மோதி 3 பேர் படுகாயம்
x

மோட்டார் சைக்கிள்கள் மோதி 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

கரூர்

குளித்தலை அருகே உள்ள திம்மாச்சிபுரம் குடித்தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 48). இவர் சம்பவத்தன்று தனது மாமாவான அதே பகுதியை சேர்ந்த கதிர்வேல் (53) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். குளித்தலை அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலைய பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அதே சாலையில் எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ராஜா, கதிர்வேல் மற்றும் எதிரே வந்து விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த லாலாபேட்டை அருகே உள்ள பிள்ளாபாளையம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (41) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் கதிர்வேல் மற்றும் விஜயகுமார் ஆகிய 2 பேரும் முதலுதவி சிகிச்சை பெற்று திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் கரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். ராஜா குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story