கடைகளில் 3 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்


கடைகளில் 3 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 15 Jun 2023 12:21 AM IST (Updated: 15 Jun 2023 1:50 PM IST)
t-max-icont-min-icon

கடைகளில் 3 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை

பொன்னமராவதி அருகே நகரப்பட்டியில் சுகாதாரத்துறையின் சார்பில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், பிளாஸ்டிக் பைகள் மற்றும் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று புகையிலை கட்டுப்பாட்டு ஆலோசகர் மருத்துவர் சுகன்யா, சமூக நல பணியாளர் சர்வின் பானு, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நாகலிங்கம், சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது கடைகளில் இருந்து 3 கிலோ பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து, அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்ய கூடாது என்று கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்து அறிவுரை வழங்கினர்.


Next Story