சலவையகங்கள், ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க ரூ.3 லட்சம் நிதி பிற்படுத்தப்பட்டோர விண்ணப்பிக்கலாம்


சலவையகங்கள், ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க ரூ.3 லட்சம் நிதி பிற்படுத்தப்பட்டோர விண்ணப்பிக்கலாம்
x

நவீனமுறை சலவையகங்கள், ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க ரூ.3 லட்சம் நிதி வழங்கப்படுகிறது. பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர்

நவீனமுறை சலவையகங்கள், ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க ரூ.3 லட்சம் நிதி வழங்கப்படுகிறது. பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பத்தூர் மாவட்டத்தினை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், மாறிவரும் சூழலுக்கு ஏற்பவும் சலவைத் தொழில் செய்யும் நவீன முறை சலவையகங்கள் அமைக்கவும் மற்றும் ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும். 10 நபர்களை கொண்ட ஒரு குழுவாக இருத்தல் வேண்டும். ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்றை விதவை பெண்கள் அமைத்துள்ள குழுவிற்கு முன்னுரிமை அளிக்கப்படும். 10 நபர்களுக்கும் தையல் தொழில் தெரிந்து இருக்க வேண்டும். குழு உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபிர் சமூகத்தை சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் குழுவிற்கு நவீன முறை சலவையகங்கள் மற்றும் ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க தேவையான உபகரணங்கள் வாங்க ரூ.3 லட்சம் நிதி வழங்கப்படும்.

இத்தொழில் செய்ய விரும்பும் முன் அனுபவமுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த சலவைத் தொழில் செய்யும் மக்கள், குழுவாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று வருகிற 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

இத்திட்டத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தினை சேர்ந்த தகுதியானவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.


Next Story