வெளிநாட்டில் வேலைவாங்கி தருவதாக ரூ.3¼ லட்சம் மோசடி


வெளிநாட்டில் வேலைவாங்கி தருவதாக ரூ.3¼ லட்சம் மோசடி
x

வெளிநாட்டில் வேலைவாங்கி தருவதாக ரூ.3¼ லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர்

அணைக்கட்டு அடுத்த கொல்லகொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சரவணபாபு (வயது 42). இவர் குவைத் நாட்டில் ஓட்டலில் பணியாற்றி வந்தார். கொரோனா பரவல் காரணமாக ஊர் திரும்பினார். இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் முகநூல் பகுதியில் வெளிநாட்டில் வேலை இருப்பதாக ஒரு விளம்பரத்தை அவர் பார்த்துள்ளார். பின்னர் அதில் இருந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது செல்போனில் பேசிய நபர்கள் பதிவு கட்டணம், விசா பெற கட்டணம் செலுத்தவேண்டும் என்றனர். இதை நம்பிய அவர் பல்வேறு தவணைகளில் ரூ.3 லட்சத்து 29 ஆயிரத்து 500 செலுத்தினார்.

ஆனால் பல நாட்கள் ஆகியும் வேலை சம்பந்தமாக எந்த தகவலையும் அவர்கள் சரவணபாபுவுக்கு தெரிவிக்கவில்லை. பணத்தையும் அவர்கள் திருப்பி கொடுக்கவில்லை. இதனால் சந்தேமடைந்த சரவணபாபு அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது.

இதுகுறித்து அவர் வேலூர் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story