வாலிபர் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது
வாலிபர் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சமயபுரம் அருகே உள்ள சேனியகல்லுக்குடியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் பாபு (வயது 28). பூக்கட்டும் தொழிலாளியான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு டாஸ்மாக் பாரில் மது குடித்தபோது ஏற்பட்ட தகராறில் வெட்டிக்ெகாலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக, நாகப்பட்டினம் கோர்ட்டில் வீ. துறையூர் மாரியம்மன் கோவில் தெருவைச்சேர்ந்த நீலமேகம் மகன்கள் வெங்கடாஜலபதி (25), கணேசன் (24), விநாயகமூர்த்தி (23) ஆகிய 3 பேர் நேற்று முன்தினம் சரணடைந்தனர். இந்த நிலையில் நேற்று வீ. துறையூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிச்சை மகன் ராஜு என்ற ராஜீவ்காந்தி (36), மாகாளிகுடி புதுராஜா தெருவைச்சேர்ந்த வேல்முருகன் மகன் அருண் (21), ரமேஷ் மகன் ராமு (23) ஆகியோரை சமயபுரம் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.