மர்மமான முறையில் செத்து கிடந்த 3 மயில்கள்


மர்மமான முறையில் செத்து கிடந்த 3 மயில்கள்
x

திட்டக்குடி அருகே மர்மமான முறையில் செத்து கிடந்த 3 மயில்கள் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்

திட்டக்குடி,

திட்டக்குடி அருகே உள்ள செங்கமேடு கிராமத்தில் வெலிங்டன் நீர்த்தேக்கம் பாசன வாய்க்கால் ஓரம் 3 மயில்கள் மர்மமான முறையில் செத்து கிடந்தன. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் திட்டக்குடி போலீசார் மற்றும் விருத்தாசலம் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து செத்து கிடந்த மயில்களின் உடல்களை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அந்த மயில்களின் உடல்களை உடற்கூராய்வு செய்து, புதைத்தனர். மேலும் மயில்களுக்கு விஷம் வைத்து கொல்லப்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story