3அரசு பஸ்கள் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு


3அரசு பஸ்கள் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு
x

குமாி மாவட்டத்தில் 3பஸ்கள் மீது கல் வீசப்பட்டது. இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமாி மாவட்டத்தில் 3 பஸ்கள் மீது கல் வீசப்பட்டது. இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.

பா.ஜனதா- காங்கிரஸ் மோதல்

குமரி மாவட்டம் நாகா்கோவிலில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சியினர் இடைேய நேற்று முன்தினம் பயங்கர மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மோதலில் ஈடுபட்ட 2 தரப்பினர்களையும் போலீசார் கைது செய்து வருகிறார்கள். அந்த வகையில் பா.ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ் உள்ளிட்ட 3 பேரையும், காங்கிரஸ் கட்சியில் 2 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் நேற்று இரவு 2 இடங்களில் அரசு பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவம் நடந்துள்ளது.

கல்வீச்சு

அதாவது தேங்காப்பட்டணத்தில் இருந்து மார்த்தாண்டத்துக்கு புறப்பட்ட ஒரு அரசு பஸ் நேற்று இரவு புதுக்கடை பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென பஸ்சின் முன்புற கண்ணாடி மீது கல் வீசினர். இதில் கண்ணாடி உடைந்து ெநாறுங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் பஸ்சில் இருந்தபடி கூச்சலிட்டனர். இதைத் தொடர்ந்து பஸ் சாலைேயாரம் நிறுத்தப்பட்டது. பின்னர் பயணிகளுக்கு மாற்று பஸ் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதே ேபால மார்த்தாண்டத்தில் இருந்து குளச்சல் நோக்கி புறப்பட்ட அரசு பஸ் நட்டாலம் அருகே வந்தபோது திடீரென பஸ்சின் பின்புற கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதைத் தொடர்ந்து பஸ்சை நிறுத்தி பார்த்தபோது யாரோ மர்ம நபர்கள் கல் வீசியது தெரியவந்தது. இதனையடுத்து அந்த பஸ்சும் நடுவழியில் நிறுத்தப்பட்டது. குமரி மாவட்டத்தில் இரவில் அடுத்தடுத்து அரசு பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவம் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடந்து கிராம புறங்களில் நிறுத்தி வைக்கப்படும் அரசு பஸ்களை ஆங்காங்கே உள்ள டெப்ேபாவுக்கு திரும்பும்படி போக்குவரத்து கழகம் உத்தரவிட்டது.

இதேபோல கொல்லங்கோடு அருகே சாத்தன்கோடு பகுதி வழியாக சென்ற ஒரு அரசு பஸ் மீதும் மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதில் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதற்கிடையே வடசேரியில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன.


Next Story