சிறுத்தையின் பற்கள், நகத்தை வீட்டில் பதுக்கிய 3 பேர் கைது
சிறுத்தையின் பற்கள், நகத்தை வீட்டில் பதுக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
விக்கிரமசிங்கபுரம்:
சிறுத்தையின் பற்கள், நகத்தை வீட்டில் பதுக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிறுத்தை நகம் பறிமுதல்
முண்டந்துறை வனச்சரகத்துக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் இறந்து கிடந்த சிறுத்தையின் பற்கள், நகத்தை சிலர் வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் வனத்துறையினர் விசாரணை நடத்தி, சேர்வலாறை சேர்ந்த அமல்ராஜ் (வயது 47), விக்கிரமசிங்கபுரம் சங்கரபாண்டியபுரம் பகுதியை சேர்ந்த சுல்தான் இப்ராகிம் மகன் கோதரின் (27), கோட்டைவிளைப்பட்டியை சேர்ந்த நல்லபெருமாள் மகன் ராம்குமார் (33) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சிறுத்தையின் நகம், பற்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
காரணம் என்ன?
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், முண்டந்துறை வனச்சரகத்துக்கு உட்பட்ட கோவில்தேரி பீட்டில் இறந்து கிடந்த சிறுத்தையின் உடலை கைப்பற்றினர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், 'இறந்து கிடந்தது சுமார் 9 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை ஆகும். அது இறந்து பல நாட்கள் ஆகியுள்ளது. அது இயற்கை மரணம் அடைந்தது போல் தெரிகிறது. இருப்பினும் பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் அது இறந்ததற்கான காரணம் முழுமையாக தெரியவரும்' என்று தெரிவித்தனர்.