முதியவரை தாக்கி பணம் பறித்த 3 பேர் கைது


முதியவரை தாக்கி பணம் பறித்த 3 பேர் கைது
x

நெல்லை அருகே முதியவரை தாக்கி பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கல்லல் பகுதியைச் சேர்ந்தவர் ஏசுதாஸ் (வயது 60). இவர் கடந்த 3 ஆண்டுகளாக நெல்லை அருகே தாழையூத்து பகுதியில் தனியாக தங்கி இருந்து இரும்பு பொருட்கள், பாட்டில்களை சேகரித்து விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவர் நேற்று தாழையூத்து பகுதியில் நடந்து சென்றபோது, அங்கு வந்த 3 பேர் அவரை வழிமறித்து தாக்கி அவரிடம் இருந்த ரூ.570-யை பறித்து சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தாழையூத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து முதியவரை தாக்கி பணம் பறித்து சென்றதாக, நெல்லை தாழையூத்து கலைஞர் காலனி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த கார்த்திகேயன் (19), அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன், புதுக்கோட்டை அறந்தாங்கி அகதிகள் முகாமை சேர்ந்த ஹரிதரண் (29) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.


Next Story