தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது


தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது
x

நெல்லை டவுனில் தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை டவுன் வையாபுரி நகரை சேர்ந்தவர் அபிராமிசுந்தர் என்ற ரஜினி சுந்தர் (வயது 52). தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் (42), காவல்பிறை தெருவை சேர்ந்த வெங்கடேஷ் மணிகண்டன் (31), மணிகண்டன் (29) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. சம்பவத்தன்று அபிராமி சுந்தர் வீட்டுக்கு சென்ற மாரியப்பன், வெங்கடேஷ் மணிகண்டன், மணிகண்டன் ஆகியோர் சேர்ந்து அவரை தாக்கினர். இதுகுறித்த புகாரின் பேரில் நெல்லை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியப்பன் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர்.


Next Story