லாரி டிரைவரை தாக்கிய 3 பேர் கைது


லாரி டிரைவரை தாக்கிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 11 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-12T00:16:14+05:30)

வேதாரண்யத்தில் லாரி டிரைவரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டார்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது28). லாரி டிரைவரான இவர், அகஸ்தியன்பள்ளியில் உள்ள உப்பளத்தில் இருந்து லாரியில் உப்பு ஏற்றி செல்வது வழக்கம். சம்பவத்தன்று இவர் வேதாரண்யம் ராஜாஜி பூங்கா பின்புறம் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அகஸ்தியன்பள்ளி பூவன்தோப்பைச் சேர்ந்த மந்திரமூர்த்தி (27) என்பவா், ரமேசிடம் உப்பு ஏற்றியதற்கான கூலியை கேட்டுள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மந்திரமூர்த்தி தனது ஆதரவாளர்களான சரவணன்(30), பூபதி(28) மேலும் ஒருவரை அங்கு வரவழைத்தார். பின்னர் 4 பேரும் சேர்ந்து அந்த பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் இருந்து சோடா பாட்டிலை எடுத்து டிரைவர் ரமேசை தாக்கினர். இதில் காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து புகாரின் பேரில் வேதாரண்யம் சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மந்திரமூர்த்தி, சரவணன், பூபதி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story