வாலிபரை தாக்கிய 3 பேர் கைது
வாலிபரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை
மதுரை உத்தங்குடி அம்பலகாரன்பட்டி பிச்சைப்பாண்டி மகன் மணிகண்ட ஈஸ்வரன் (வயது 26). இவர் வக்கீல் ஒருவரிடம் குமாஸ்தாவாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் மாட்டுத்தாவணி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது 3 வாலிபர்கள் அவரை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் அவரை அவதூறாக பேசி கல்லால் தாக்கி கத்தியால் வெட்ட முயன்றனர். இந்த சம்பவம் குறித்து மணிகண்ட ஈஸ்வரன் மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தாக்கிய உலகனேரி ராஜீவ் காந்தி நகர் தமிழரசன் (27), அதே பகுதியைச் சேர்ந்த ராஜா (25), சுந்தரராஜன் (26) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story