கூட்டுக் கொள்ளையில் ஈடுபட சதி திட்டம் தீட்டிய 3 பேர் கைது
கூட்டுக் கொள்ளையில் ஈடுபட சதி திட்டம் தீட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை
கூட்டுக் கொள்ளையில் ஈடுபட சதி திட்டம் தீட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிவசங்கர் தலைமையிலான போலீசார் திருவண்ணாமலை திருக்கோவிலூர் பைபாஸ் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள முட்புதரில் சந்தேகப்படும் வகையில் 5 பேர் பதுங்கியிருந்ததை கண்டு அவர்களை பிடிக்க சென்றனர். போலீசார் வருவதை பார்த்த 5 பேரும் அங்கிருந்து ஓட்டம்பிடித்தனர்.
உடனே போலீசார் விரட்டிச்சென்றதில் 3 பேர் பிடிபட்டனர். அவர்கள் தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் (வயது 29), பாண்டியராஜன் (33), கமல்ராஜ் (33) என்பதும் கூட்டுக்கொள்ளையில் ஈடுபட முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து 2 கத்தியை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story