கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது
கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்
காரியாபட்டி,
நரிக்குடி அருகே எழுவனி கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகைராஜ் (வயது 38) இவர் எழுவனி தலையாரியாக பணிபுரிந்து வருகிறார். இவர் ரெட்டகுளம் கிராமத்தில் நாடகம் பார்த்துவிட்டு மோட்டார் சைக்கிளில் எழுவனி கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார்.. அப்போது ரெட்டகுளம் கிராமத்தை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (30), தமிழ்ச்செல்வம் (28), ரவிக்குமார் (25) ஆகியோர் தலையாரி கார்த்திகைராஜை வழிமறித்து அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கார்த்திகைராஜ் அளித்த புகாரின் பேரில் அ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நவநீதகிருஷ்ணன், தமிழ்ச்செல்வம், ரவிக்குமார் ஆகியோரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story