கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது
கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாபட்டி அம்மச்சியார்புரம் காலனியை சேர்ந்தவர் பாண்டியம்மாள் (வயது32), பாலாஜி (25), பாலகிருஷ்ணன் (20). இவர்கள் 3 பேரும் வத்திராயிருப்பு - கூமாபட்டி சாலையில் உள்ள மூலக்கரை ஆலமரம் அருகே நின்று கொண்டு இருந்தனர்.. அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார், அவர்களை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் 1 கிலோ 200 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து பாண்டியம்மாள், பாலாஜி, பாலகிருஷ்ணன் ஆகிய 3 பேரையும் கூமாபட்டி போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story