விருதுநகரில் கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது
கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர்
விருதுநகர் அருகே ஆர்.ஆர். நகரை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 33). துலுக்கப்பட்டியை சேர்ந்தவர் குணசேகரன் (24). இவர்கள் 2 பேரும் ஆவுடையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே 100 கிராம் கஞ்சா பொட்டலத்துடன் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்பகுதியில் ரோந்து சென்ற வச்சகாரப்பட்டி போலீசார் அவர்களிடம் இருந்த கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்ததுடன் அவர்கள் 2 பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல விருதுநகர் அருகே சின்ன பேராலி கிராமத்தில் கருப்பசாமி கோவில் அருகே 20 கிராம் கஞ்சாவுடன் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த வினோத் குருநாதன் (23) என்பவரிடமிருந்து 20 கிராம் கஞ்சாமற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்த பாண்டியன் நகர் போலீசார் அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.
Related Tags :
Next Story