மது விற்ற 3 பேர் கைது; 35 மதுபாட்டில்கள் பறிமுதல்
மது விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டு, 35 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அரியலூர்
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இரும்புலிக்குறிச்சி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து இரும்புலிக்குறிச்சி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி உள்ளிட்ட போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மது விற்றது தொடர்பாக பரணம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ்குமார்(வயது 38), ஆனந்தவாடி கிராமத்தை சேர்ந்த இளவரசன்(40), இரும்புலிக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த லதா ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 35 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை செந்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story