கஞ்சா விற்ற 3 பேர் கைது
மானூர் அருகே கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மானூர்:
மானூர் போலீசார் நரியூத்து பரும்பு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு சந்தேகப்படும் வகையில், 2 பைகளுடன் 4 பேர் நின்று கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். போலீசார் அவர்களில் 3 பேரை மடக்கி பிடித்தனர். விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம், சிங்கத்தாகுறிச்சி அருகில் உள்ள காசிலிங்கபுரத்தைச் சேர்ந்த முருகன் மகன் மாரிசெல்வம் (வயது 23), நெல்லை சந்திப்பை சேர்ந்த மாரியப்பன் மகன் முத்து (20) மற்றும் 18 வயது மதிக்கத்தக்க ஒருவர் என்பதும், தப்பி ஓடியவர் கண்டியப்பேரியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் விற்பனைக்காக ஒரு கிலோ கஞ்சா வைத்திருந்ததும், ரூ.4 ஆயிரம் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரை போலீசார் கைது செய்து கஞ்சா மற்றும் பணத்துடன் 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.