கஞ்சா விற்ற 3 பேர் கைது
தூத்துக்குடியில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்கு கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடியில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்கு கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கஞ்சா விற்பனை
தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவசுப்பு மேற்பார்வையில் தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் ஜூடி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தூத்துக்குடி திரு.வி.க. நகர் பகுதியில் உள்ள தனியார் உப்பள கொட்டகையில் 3 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் தூத்துக்குடி இந்திராநகர் பகுதியை சேர்ந்த முருகன் மகன் ராம்குமார் (வயது 22), தூத்துக்குடி பி அன் டி காலனி பகுதியை சேர்ந்த நாகசுந்தரம் மகன் பிரதீப் (22) மற்றும் தாளமுத்துநகர் தாய் நகர் பகுதியை சேர்ந்த சிவலிங்கம் மகன் லிங்கம் (64) என்பதும் அவர்கள் 3 பேரும் அந்த பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
3 பேர் கைது
உடனே போலீசார் ராம்குமார், பிரதீப் மற்றும் லிங்கம் ஆகிய 3 பேரையும் கைது செய்து, 4 கிலோ கஞ்சா, ரூ.55 ஆயிரம் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.