கஞ்சா விற்ற 3 பேர் கைது


கஞ்சா விற்ற 3 பேர் கைது
x

நெல்லையில் கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை சந்திப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜனகர் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்திப்பு வேன் ஸ்டாண்டு அருகே சந்தேகப்படும் படியாக நின்றுகொண்டு இருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் நெல்லை டவுன் மணிபுரத்தை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 29), டவுன் வயல்தெருவை சேர்ந்த இசக்கி (29) ஆகியோர் என்பதும், கஞ்சா விற்பனை செய்ய பதுக்கி வைத்து இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 44 கிராம் கஞ்சா, 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதேபோல் பாளையங்கோட்டை போலீசார் வாய்க்கால் பாலம் மதுக்கடை அருகே சந்தேகப்படும் படியாக நின்றுகொண்டு இருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் சமாதானபுரத்தை சோ்ந்த பிரதீப்குமார் (26) என்பதும், கஞ்சா வைத்து இருந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Next Story