லாட்டரி சீட்டுகளை விற்ற 3 பேர் கைது
லாட்டரி சீட்டுகளை விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி
திருச்சி கொட்டப்பட்டு, தென்னூர் மந்தை மற்றும் உறையூர் பகுதிகளில் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பதாக போலீசாருக்கு பல்வேறு புகார் வந்தது. அதன் பேரில் கே.கே.நகர், தில்லைநகர் மற்றும் உறையூர் போலீசார் அந்த பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது அங்கு வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்றதாக கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்த எம்.சதீஷ் (வயது 38), சிந்தாமணி பகுதியை சேர்ந்த கே.சதீஷ் (40), அரியமங்கலம் பகுதியை சேர்ந்த ஜாகிர் உசேன் (46) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து லாட்டரி சீட்டு விற்ற பணம் ரூ.290-ஐ போலீசார் கைப்பற்றினர்.
Related Tags :
Next Story