லாட்டரி சீட்டுகள் விற்ற 3 பேர் கைது
லாட்டரி சீட்டுகள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர்
குளித்தலை அருகே உள்ள தண்ணீர்பள்ளி, தாளியாம்பட்டி, குளித்தலை சுங்ககேட் பஸ் நிறுத்தம் ஆகிய பகுதிகளில் ஆன்லைன் லாட்டரிகள் விற்பதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அந்தப் பகுதிகளுக்கு சென்ற போலீசார் அங்கு ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்ற தண்ணீர்பள்ளி பகுதியை சேர்ந்த சிவராஜ்(வயது 64), கீழதாளியாம்பட்டியை சேர்ந்த செந்தில்குமார்(42), குளித்தலை கடம்பர் கோவில் பகுதியை சேர்ந்த சந்தோஷ்(28) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து தலா ரூ.200 வீதம் ரூ.600 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story