1200 கிலோ இரும்பு பொருட்களை திருடிய 3 பேர் கைது
1200 கிலோ இரும்பு பொருட்களை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடலூர்
சிதம்பரம்,
புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் வினதா தலைமையிலான போலீசார் நேற்று பெரியப்பட்டு ஆண்டார் முள்ளிப்பள்ளத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இரும்பு பொருட்களை ஏற்றி வந்த சரக்கு வாகனத்தை மறித்து அதில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், நைனார்குப்பம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துமாணிக்கம் மகன் பிரசன்னா(வயது 45), ஆலப்பாக்கத்தை சேர்ந்த வீரமணி(52), வாண்டையபள்ளம் கிராமத்தை சேர்ந்த ராஜலிங்க மகன் ராஜா(43) ஆகியோர் என்பதும், பெரியகுப்பம் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து 1200 கிலோ இரும்பு பொருட்களை திருடி, அதனை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 1200 கிலோ இரும்பு பொருட்கள், சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story