குடோனில் இருந்து 50 கியாஸ் சிலிண்டர்களை திருடிய 3 பேர் கைது


குடோனில் இருந்து 50 கியாஸ் சிலிண்டர்களை திருடிய 3 பேர் கைது
x

கரூர் அருகே குடோனில் இருந்து 50 கியாஸ் சிலிண்டர்களை திருடிய 3 ேபரை போலீசார் கைது செய்தனர்.

கரூர்

கியாஸ் சிலிண்டர்கள் திருட்டு

கரூர் அடுத்த புலியூர் பகுதியில் லலிதா வசுமதி என்பவர் கடந்த 8 வருடமாக கியாஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார். இதனால் அதே பகுதியில் உள்ள குடோனில் சிலிண்டர்களை பாதுகாப்பாக வைத்து பராமரித்து வருகிறார். இந்த குடோனில் கடந்த 22-ந்தேதி இரவு மர்ம நபர்கள் புகுந்து 50 கியாஸ் சிலிண்டர்களை திருடி சென்று விட்டனர்.

இதுகுறித்து வசுமதி பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் பசுபதிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

3 பேர் கைது

விசாரணையில், கியாஸ் சிலிண்டர்களை திருடியது உப்பிடமங்கலம் அருகே உள்ள வெண்ணிலை பகுதியை சேர்ந்த பாலுசாமி (வயது 47), காய்கறி வியாபாரி மணி (35), மரவியாபாரி கண்ணன் (54) ஆகியோர் சேர்ந்து குடோனில் இருந்து 50 கியாஸ் சிலிண்டர்களை திருடிய தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் பாலுசாமி வீட்டில் இருந்த 50 கியாஸ் சிலிண்டர்களையும், திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story