'ஷூ' கம்பெனியில் டீசல் திருடிய 3 ேபர் கைது
‘ஷூ’ கம்பெனியில் டீசல் திருடிய 3 ேபர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பத்தூர்
ஆம்பூரை அடுத்த துத்திப்பட்டு பகுதியில் உமராபாத் போலீசார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் வந்த 3 பேர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். காரை சோதனை செய்தபோது, அதில் 6 கேன்களில் 200 லிட்டர் டீசல் இருந்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து 3 பேரை உமராபாத் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் குடியாத்தம் கொண்டசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த ரவி (வயது 27), நவீன் (27), பச்சையப்பன் (42) என்பதும், துத்திப்பட்டு பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் ஷூ கம்பெனியில் இருக்கும் ஜெனரேட்டரில் இருந்து டீசல் திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story