திருட்டு வழக்கில் கைதான 3 பேர் பல இடங்களில் கைவரிசை


திருட்டு வழக்கில் கைதான 3 பேர் பல இடங்களில் கைவரிசை
x

நித்திரவிளை அருகே நகை திருட்டு வழக்கில் கைதான 3 பேர் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியுள்ளது போலீஸ் விசாரணையில் ெதரிய வந்தது. இதில் மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளது.

கன்னியாகுமரி

கொல்லங்கோடு,

நித்திரவிளை அருகே நகை திருட்டு வழக்கில் கைதான 3 பேர் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியுள்ளது போலீஸ் விசாரணையில் ெதரிய வந்தது. இதில் மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளது.

நகை திருட்டு

நித்திரவிளை அருகே உள்ள விரிவிளை சிங்கம்பழஞ்சி பகுதியை சேர்ந்தவர் பாபு, வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி உஷா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று உஷா குழந்தைகள் அணிந்திருந்த தங்க சங்கிலி, தங்க மோதிரம் உள்ளிட்ட 5½ பவுன் நகைகளை கழற்றி வீட்டின் அலமாரியில் வைத்திருந்தார். இதை நோட்டமிட்ட அதே பகுதியை சேர்ந்த வில்சன் மகன் அனீஷ் (வயது20), அவரது நண்பர்கள் விபின் (27), வினீஸ் (23) ஆகியோர் இரவில் வீட்டின் வெளிப்புற ஜன்னலை திறந்து நகைகளை நைசாக திருடி சென்றுள்னர்.

இதுகுறித்த புகாரின் அடிப்படையில் அனீஷ், விபின், வினீஸ் ஆகியோரை ேபாலீசார் கைது செய்தனர். அத்துடன் அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் புதுக்கடையில் ஒரு கடையில் விற்கப்பட்ட 5½ பவுன் நகைகளை ேபாலீசார் மீட்டனர்.

பல்வேறு இடங்களில் கைவரிசை

கைது செய்யப்பட்ட 3 பேரிடம் நடத்திய விசாரணையில் இவர்களும் வேறு சில நண்பர்களும் சேர்ந்து பல்வேறு திருட்டுகளில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. குறிப்பாக இவர்கள் இரணியல், கருங்கல், புதுக்கடை, கொல்லங்கோடு ஆகிய போலீஸ் நிலைய பகுதிகளில் உள்ள கோவில்களின் உண்டியல்களை உடைத்து காணிக்கை பணத்தையும், வீடுகளில் புகுந்து நகைகளையும் திருடி வந்துள்ளனர்.

இதை அவர்கள் போலீஸ் விசாரணையில் ஒப்பு கொண்டுள்ளனர். இதையடுத்து 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story