நாட்டு துப்பாக்கியுடன் 3 பேர் கைது
ஆட்டையாம்பட்டி அருகே நாட்டு துப்பாக்கியுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பனமரத்துப்பட்டி:-
ஆட்டையாம்பட்டி அருகே நாட்டு துப்பாக்கியுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நண்பர்கள்
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியை அடுத்த கல்பாரப்பட்டி பிரிவு சாலையில் நேற்று முன்தினம் இரவு ஆட்டையாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்சவல்லி தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்களை போலீசார் மறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பெருமாம்பட்டியை சேர்ந்த முத்துசாமி மகன் சரவணன் (வயது 30), அவருடைய நண்பர்கள் கல்பாரப்பட்டி கீழ்காட்டுவளவை சேர்ந்த விஜய் (22), தும்துளிப்பட்டி பிய்யமரம் பகுதியை சேர்ந்த பழனிசாமி மகன் நாகராஜ் (55) என்பது தெரிய வந்தது. இதில் சரவணன் மருந்து விற்பனை முகவர் ஆவார்.
துப்பாக்கி
அவர்கள் வைத்திருந்த பையை சோதனையிட்ட போது அதில் நாட்டு துப்பாக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதுவும் அனுமதி இல்லாமல் அவர்கள் வைத்திருந்தது தெரிய வந்தது. மேலும் துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் பால்ரஸ் குண்டுகள், கரிமருந்து உள்ளிட்டவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்கள் 3 பேரும், இரவு நேரங்களில் முயல்வேட்டைக்கு செல்வதற்காக துப்பாக்கி வைத்திருந்தது விசாரணையில் தெரிய வந்தது.
அனுமதி இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்ததாக சரவணன் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.