மதுகுடிக்க பணம் கொடுக்க மறுத்ததால் அடகுகடை உரிமையாளரை தாக்கி கடைக்குள் வைத்து பூட்டிச்சென்ற 3 பேர்


மதுகுடிக்க பணம் கொடுக்க மறுத்ததால் அடகுகடை உரிமையாளரை தாக்கி கடைக்குள் வைத்து பூட்டிச்சென்ற 3 பேர்
x

மதுகுடிக்க பணம் கொடுக்க மறுத்ததால் அடகுகடை உரிமையாளரை தாக்கி கடைக்குள் வைத்து பூட்டிச்சென்றது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்

கடலூர்,

கடலூர் குண்டுஉப்பலவாடியை சேர்ந்தவர் ஓம்பிரகாஷ் (வயது 40). இவர் அதே பகுதியில் நகை அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று ஓம்பிரகாஷ், கடையில் இருந்த போது அங்கு 3 பேர் மதுபோதையில் வந்துள்ளனர். அப்போது அவர்கள், மதுகுடிக்க ஓம்பிரகாசிடம் பணம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த 3 பேரும், ஓம்பிரகாசை தாக்கி கடைக்குள் வைத்து பூட்டிச் சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்த தேவனாம்பட்டினம் போலீசார் விரைந்து சென்று, கடைக்குள் இருந்த ஓம்பிரகாசை மீட்டனர். பின்னர் அவரை தாக்கி கடைக்குள் வைத்து பூட்டியவர்கள் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த அப்பு, வினோத், வீரமணி என்பது தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் அப்பு உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story