தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற 3 பேர் சிக்கினர்


தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற 3 பேர் சிக்கினர்
x

தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற 3 பேர் சிக்கினர்

மதுரை

உசிலம்பட்டி

உசிலம்பட்டியை அடுத்த எழுமலை பஜார் பகுதியில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின்படி எழுமலை போலீசார் எழுமலை பஜார் பகுதி, புல்லுக்கடை மைதானம், தேவர் சிலை உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது பஜார் பகுதியில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த எழுமலையைச் சேர்ந்த சிங்கராஜ் (வயது59), ராமராஜன் (35), ராஜேந்திரன் (56) ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 184 கேரள லாட்டரி சீட்டுகளையும், 23 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தையும் பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story