திருப்பரங்குன்றம் அருகே வயர் திருடிய 3 பேர் சிக்கினர்
திருப்பரங்குன்றம் அருகே வயர் திருடிய 3 பேர் செய்யப்பட்டனர்
மதுரை
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் ஸ்ரீராமவிலாஸ் காலனியில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூசாரியாக ராஜா உள்ளார். நேற்று காலையில் அவர் வழக்கம் போல பூஜை செய்வதற்காக கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலுக்கு அருகே உள்ள போர்வெல்லில் இருந்து செல்லக்கூடிய சப் மோட்டார் வயரை வெட்டி 3 பேர் திருட முயன்றனர்.
இதை பார்த்த பூசாரி ராஜா, அவர்களை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பிடித்து திருநகர் போலீசில் ஒப்படைத்தார். இது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கோவில் வயரை திருடியதாக சதீஷ், கவுதம், ராம்குமார் ஆகியோரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story