வெவ்வேறு இடங்களில் 3 பேர் தற்கொலை


வெவ்வேறு இடங்களில் 3 பேர் தற்கொலை
x

வெவ்வேறு இடங்களில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

தர்மபுரி

தர்மபுரி இலக்கியம்பட்டி பகுதியை சேர்ந்த பழனி மகள் அர்ஷியாதேவி (வயது 19). தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் முதலாம் ஆண்டு படித்துவந்தார். கல்லூரி கட்டணம் செலுத்த வீட்டில் பணம் கேட்டதாகவும், பணத்தை செலுத்த தாமதம் ஆனதாகவும் தெரிகிறது. இதில் மனம் உடைந்த அர்ஷியாதேவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதேபோல் தர்மபுரி வேப்பமரத்துகொட்டாய் பகுதியை சேர்ந்த சக்திவேல் மனைவி ஜோதி (23). கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த ஜோதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலைகள் தொடர்பாக தர்மபுரி டவுன் போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பொம்மிடியை அடுத்த நத்தமேடு கிராமத்தைச் சேர்ந்த பழனியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவருடைய மனைவி பிரிந்து சென்றார். இதில் மனம் உடைந்த பழனி காப்புகாட்டில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story