வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் பலி
சிவகாசி அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் பலியாகினர்.
சிவகாசி,
சிவகாசி அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் பலியாகினர்.
தனியார் நிறுவன ஊழியர்
சிவகாசி-திருத்தங்கல் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் துரைப்பாண்டி (வயது 43). இவர் சிவகாசியில் உள்ள ஒரு நிறுவனத்தில் மானேஜராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் ரெயில்வே பீடர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத வகையில் துரைப்பாண்டி நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து துரைப்பாண்டி மகள் அர்ச்சனா கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
டீ வியாபாரி
திருத்தங்கலை சேர்ந்தவர் கதிரேசன் (65). இவர் சிவகாசி காய்கறி மார்க்கெட்டில் டீ வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு காய்கறி மார்க்கெட்டில் டீ வியாபாரம் செய்து கொண்டு இருந்த போது திடீரென நிலை தடுமாறி விழுந்தார். இதில் அவருக்கு ரத்த காயம் ஏற்பட்டது.
உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து சிவகாசி டவுன் போலீசார் சந்தேகமரணம் என வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மற்றொரு விபத்து
திருத்தங்கல் பாண்டியன்நகரை சேர்ந்தவர் பழனிசாமி (47). இவர் கேரளாவில் பால் கறக்கும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் பழனிசாமி திருத்தங்கல் திரும்பினார். இங்கு அவர் புதிய வீடு கட்டி வருகிறார்.
இதற்கிடையில் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் திருத்தங்கல்-எஸ்.என்.புரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் பழனிசாமியின் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பழனிசாமியின் மனைவி லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.