வடமாநில தொழிலாளி உள்பட 3 பேர் சாவு


வடமாநில தொழிலாளி உள்பட 3 பேர் சாவு
x

வெவ்வேறு சம்பவத்தில் வடமாநில தொழிலாளி உள்பட 3 பேர் இறந்தனர்.

திருச்சி

வெவ்வேறு சம்பவத்தில் வடமாநில தொழிலாளி உள்பட 3 பேர் இறந்தனர்.

வடமாநில தொழிலாளி

ஒடிசா மாநிலம் காசி பட டீக்காளி பகுதியை சேர்ந்தவர் பிருண்பன் பிரதான் (வயது 50). இவர் கடந்த 13-ந்தேதி திருச்சி அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது, அவர் தவறி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார். இதை கண்ட சக ஊழியர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லக்குடி

கல்லக்குடி அருகே உள்ள காணக்கிளியநல்லூர் போலீஸ் சரகம் வரகுப்பை கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. நகை தொழிலாளி. இவரது மனைவி ராஜம்மாள் (39). இந்த தம்பதிக்கு திருமணம் முடிந்து 18 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி மதுபோதையில் இருந்த சுந்தரமூர்த்தி தவறி கீழே விழுந்தார். இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுந்தரமூர்த்தி சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் காணக்கிளியநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வியாபாரி சாவு

புலிவலம் அருகே உள்ள திண்ணனூரை சேர்ந்தவர் காமராஜ் (30). இவர் சமயபுரம் கடைவீதியில் உள்ள ஒரு கடையில் பொரி வியாபாரம் செய்து வந்தார். குடிபழக்கம் உள்ள இவர் நேற்று காலை சமயபுரம் நால்ரோடு நுழைவு வாயில் அருகே இறந்து கிடந்தார். இது குறித்த புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காமராஜ் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story