ஏரிமலை காப்புக்காட்டில் தேக்கு மரங்களை வெட்டி கடத்த முயற்சி-3 பேருக்கு அபராதம்
ஏரிமலை காப்புக்காட்டில் தேக்கு மரங்களை வெட்டி கடத்த முயன்ற 3 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சேலம்
சேர்வராயன் வடக்கு வனச்சரகத்துக்குட்பட்ட பொம்மிடி அருகே உள்ள ஏரிமலை காப்புக்காட்டிற்குள் சிலர் அத்துமீறி நுழைந்து தேக்கு மரங்களை வெட்டுவதாக வனச்சரக அலுவலர் பரசுராமமூர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் உத்தரவின் பேரில் வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று கண்காணித்தனர்.
அப்போது அங்கு தேக்கு மரங்களை வெட்டி கடத்த முயன்ற 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் வீராட்சியூர் பகுதியை சேர்ந்த பழனிவேல் (வயது 45), வேப்படியை சேர்ந்த அண்ணாமலை (45), பூமராத்தூரை சேர்ந்த தனக்கோடி (40) ஆகியோர் என்பது தெரியவந்தது.
பின்னர் அவர்களிடம் இருந்து வெட்டப்பட்ட தேக்கு மரங்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து பழனிவேல் உள்பட 3 பேருக்கும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சேலம் மாவட்ட வன அலுவலர் (பொறுப்பு) கவுதம் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story