செல்போன் திருட்டில் ஈடுபட்ட2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது


செல்போன் திருட்டில் ஈடுபட்ட2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது
x

செல்போன் திருட்டில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம்

சேலம்,

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 32). இவர் நேற்று முன்தினம் சேலம் புதிய பஸ் நிலையத்துக்கு வந்தார். அவர் பழைய பஸ் நிலையத்துக்கு செல்வதற்காக டவுன் பஸ்சில் ஏறினார். அப்போது அவருடைய பேண்ட் பையில் இருந்த செல்போனை மர்ம நபர் ஒருவர் நைசாக திருடினார். இதை பார்த்த சக பயணிகள் அந்த நபரை மடக்கி பிடித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தை சேர்ந்த தருண் (20) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் புதிய பஸ் நிலையம் பகுதியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்த சேட்டு (33) என்பவரிடம் செல்போன் பறித்ததாக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 15 மற்றும் 14 வயதுடைய சிறுவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்தும் செல்போன் மீட்கப்பட்டது.


Next Story