வெவ்வேறு சம்பவத்தில் வாலிபர் உள்பட 3 பேர் தற்கொலை
வெவ்வேறு சம்பவத்தில் வாலிபர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டார்.
வெவ்வேறு சம்பவத்தில் வாலிபர் உள்பட 3 பேர் தற்ெகாலை செய்து கொண்டார்.
விஷம் குடித்து தற்கொலை
கல்லக்குடி அருகே உள்ள கல்லகம் மேலத்தெருவை சேர்ந்தவர் ராசு. இவரது மகன் ரஞ்சித் குமார் (வயது 24).இவர் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் ரஞ்சித்குமாரை வேலைக்கு செல்லுமாறு அவரது தாய் சுகந்தி அறிவுறுத்தி வந்தார்.
நேற்று முன்தினம் சுகந்தி சித்தாள் வேலைக்கு புறப்பட்டு கொண்டிருந்தார். அப்போது, ரஞ்சித்குமார் தனக்கு பணம் வேணும் என கேட்டுள்ளார். அதற்கு அவர் உனக்கு பணம் தர முடியாது, நீ சம்பாதித்து செலவு செய்து கொள் என திட்டிவிட்டு சென்றுவிட்டார். இதனால் மனம் உடைந்த ரஞ்சித்குமார் ஊருக்கு ஒதுக்குபுறமான இடத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
இதை கண்டவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் கல்லக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெயிண்டர் தற்கொலை
லால்குடி அருகே உள்ள ஆலங்குடி மகாஜனம் ஊராட்சி கொள்ளுமேடு கிராமத்தை சேர்ந்தவர் ஜான் ஆல்பர்ட் (60). பெயிண்டர். இவர் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தாலுகா மேலத்திருப்பந்ததுருத்தி கிராமத்தில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
மேலும் ஜான் ஆல்பர்ட் சொந்தஊரான கொள்ளுமேடு கிராமத்தில் வீடு கட்டி உள்ளார். இந்த நிலையில் ஜான்ஆல்பர்ட்டுக்கும், கொள்ளுமேடு கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கும் கொடுக்கல்-வாங்கல் பிரச்சினை இருந்து வந்தது. இது தொடர்பாக பஞ்சாயத்து பேசுவதாக மனைவியிடம் கூறி சென்றுள்ளார். அதன் பின்னர் ஜான்ஆல்பர்ட் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் ஜான்ஆல்பர்ட் கொள்ளுமேடு கிராமத்தில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து கல்லக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜான்ஆல்பர்ட் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதியவர் தற்ககொலை
மணப்பாறையை அடுத்த தாமஸ்நகர் பகுதியை சேர்ந்தவர் ஜோசப் ( 60). இவர் நேற்று தனது வீட்டில் உள்ள கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோசப் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.