விபத்துகளில் தொழிலாளி உள்பட 3 பேர் படுகாயம்
மாவட்டத்தில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் வடமாநில தொழலாளி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
சிவகாசி
மாவட்டத்தில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் வடமாநில தொழலாளி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து
சாத்தூர் அருகே உள்ள படந்தால் கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 56). இவர் அதே பகுதியில் அரிசி கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு 9 மணிக்கு தனது அரிசிகடையை மூடி விட்டு சாத்தூர்-தாயில்பட்டி ரோட்டில் படந்தால் முனியசாமி கோவில் அருகில் இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சத்திரப்பட்டியை சேர்ந்த நாராயணன் மகன் மாரிச்சாமி (19) என்பவர் ஓட்டி வந்த இன்னொரு இருச்சக்கர வாகனம் ராதாகிருஷ்ணன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சாத்தூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த ராதாகிருஷ்ணன் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து சாத்தூர் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மற்றொரு சம்பவம்
இதேபோல் மராட்டிய மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர் கபில் (வயது 56). இவர் பேப்பர் மில்களில் பயன்படுத்தப்படும் கலர் டை விற்பனை செய்து வருகிறார். சம்பவத்தன்று சாத்தூர் பஸ் நிலையம் அருகில் நடந்து வந்து கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த விபத்து குறித்து கபில் கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விபத்துக்கு காரணமான இருச்சக்கர வாகனத்தை தேடி வருகிறார்கள்.