இளம்பெண் உள்பட 3 பேர் தற்கொலை


இளம்பெண் உள்பட 3 பேர் தற்கொலை
x

நெல்லையில் இளம்பெண் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

திருநெல்வேலி

நெல்லையில் இளம்பெண் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

இளம்பெண்

நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகரை சேர்ந்தவர் மாடசாமி. இவருடைய மகள் அமுதா (வயது 22). இவர் நெல்லையில் உள்ள கல்லூரியில் படித்துவிட்டு, சென்னையில் உள்ள ஒரு ஐ.ஏ.எஸ். அகாடமியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்று வீட்டில் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

ஆனால் பெற்றோர் அதற்கு அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அமுதா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பஸ் டிரைவர்

அதேபோல் மேலப்பாளையம் டாக்டர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ஆவுடையப்பன் (50). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். இவருக்கு மது பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை ஆவுடையப்பனின் மனைவி கண்டித்தாா். இதனால் மனமுடைந்த ஆவுடையப்பன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

மேலும் சீவலப்பேரி அருகே உள்ள பாலாமடை இந்திரா நகரை சேர்ந்த சிவராஜ் (28) என்பவர் தூத்துக்குடி துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையில் கிரேன் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். இவர் சம்பவத்தன்று குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இந்த சம்பவம் குறித்து சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story