கஞ்சா விற்ற முதியவர் உள்பட 3 பேர் கைது


கஞ்சா விற்ற முதியவர் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 9 Oct 2022 12:15 AM IST (Updated: 9 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் அருகே கஞ்சா விற்ற முதியவர் உள்பட 3 பேர் கைது

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்

சின்னசேலம் அடுத்த பெத்தானூர் சுடுகாட்டுப்பகுதியில் கஞ்சா விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த முதியவர் மற்றும் 2 வாலிபர்கள் தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் சிறுமங்கலம் கிராமம் மேற்கு தெருவை சேர்ந்தபாவாடை(வயது 75), பெத்தானூர் மாரியம்மன் கோவில் தெரு சுப்பிரமணியன் மகன் மணிகண்டன்(22), பெத்தானூர் கிழக்கு தெரு அரசுமணி மகன் கவுசிக்(27) என்பதும், கஞ்சா விற்பனைசெய்து கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைதுசெய்த போலீசார் அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Next Story