அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் கைது
சிறுவனை தாக்கிய அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல்
பழனி ராமநாதன் நகரை சேர்ந்த முருகானந்தம் மகன் சண்முகவேல் (வயது 17). இவன், கடந்த மாதம் 20-ந்தேதி அடிவாரம் பகுதியில் நின்று கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த அடிவாரம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன்கள் அரவிந்த் (வயது 25), சந்துரு (23), ராமநாதன்நகரை சேர்ந்த சபரிநாதன் (23) ஆகியோர் அந்த சிறுவனிடம் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் 3 பேரும் சேர்ந்து சிறுவனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் அடிவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று சபரிநாதன், அரவிந்த், சந்துரு ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story