மோட்டார் சைக்கிள் திருடிய சிறுவன் உள்பட 3 பேர் கைது


மோட்டார் சைக்கிள் திருடிய சிறுவன் உள்பட 3 பேர் கைது
x

கந்தர்வகோட்டை அருகே மோட்டார் சைக்கிள் திருடிய சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

திருட்டு

கந்தர்வகோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் கந்தர்வகோட்டை அருகே புதுநகர் அருகில் உள்ள டோல்கேட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி 2 மோட்டார் சைக்கிள்களில் 3 பேர் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின்முரணாக பேசினர். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளை திருடி வந்ததும், கடந்த 2 நாட்களாக கந்தர்வகோட்டை மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

3 பேர் கைது

மேலும் மோட்டார் சைக்கிள் திருடி வந்தது தஞ்சாவூரை சேர்ந்த தங்கையன் மகன் ராமானுஜம் (வயது 46), திருவாரூரை சேர்ந்த முகமது தமீம் (36) மற்றும் 14 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 3 ேபரையும் கைது செய்து, 2 மோட்டார் சைக்கிள், 3 செல்போன்கள், மடிக்கணினி ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story