பெண்ணை தாக்கிய தம்பதி உள்பட 3 பேர் கைது


பெண்ணை தாக்கிய தம்பதி உள்பட 3 பேர் கைது
x

பெண்ணை தாக்கிய தம்பதி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரியலூர்

விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள நாகமங்கலம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ரூபவல்லி(வயது 40). அதே பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம்(67). இவர்கள் இருவருக்கும் இடையே இடம் வாங்கியது சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. மேலும் வீட்டுமனை வாங்கியதற்கான முழு தொகையையும் மாணிக்கத்திடம் ரூபவள்ளி கொடுத்து விட்டதாகவும், இதனால் அந்த இடத்தை தனது பெயருக்கு எழுதிக் கொடுக்கும்படியும் சம்பவத்தன்று மாணிக்கத்திடம், ரூபவள்ளி கேட்டுள்ளார். அப்போது மாணிக்கத்திற்கும், ரூபவள்ளிக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியநிலையில் மாணிக்கம், அவரது மனைவி சின்னம்மாள், மகன் கருப்புசாமி ஆகியோர் சேர்ந்து ரூபவள்ளியை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து ரூபவள்ளி விக்கிரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து மாணிக்கம், சின்னம்மாள், கருப்புசாமி ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story