வக்கீல் குமாஸ்தா உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை


வக்கீல் குமாஸ்தா உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை
x

பைனான்சியர் கொலை வழக்கில் வக்கீல் குமாஸ்தா உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பத்தூர் கோர்ட்டில் தீ்ர்ப்பு வழங்கப்பட்டது.

திருப்பத்தூர்

பைனான்சியர் கொலை வழக்கில் வக்கீல் குமாஸ்தா உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பத்தூர் கோர்ட்டில் தீ்ர்ப்பு வழங்கப்பட்டது.

பைனான்சியர்

திருப்பத்தூர் அருகே திரியாலம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தபாபு (வயது 35), பைனான்சியர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அண்ணாமலை மகள் சரஸ்வதி (25) என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தாமலேரிமுத்தூர் கிராமத்தை சேர்ந்த வக்கீல் குமாஸ்தாவாக வேலை பார்க்கும் சிவா என்ற சிவன் (32) சரஸ்வதியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் சரஸ்வதி தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளதால் என்னுடன் பேச வேண்டாம் என சிவாவிடம் கூறியுள்ளார்.

இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த சிவன் ஆவேசம் அடைந்து, தனது காதலுக்கு இடையூறாக உள்ள ஆனந்தபாபுவை கொலை செய்ய முடிவு செய்தார்.

சரமாரி வெட்டிக்கொலை

இதற்காக திருப்பத்தூர் வள்ளுவர் நகரை சேர்ந்த தனது நண்பர்களான சிலம்பரசன் (27) மற்றும் சிதம்பரம் என்ற தங்கபாலு (25) ஆகிய 2 பேருடன் சேர்ந்து திட்டம் தீட்டினார்.

அதன்படி கடந்த 24-11-2020 அன்று ஆனந்தபாபு பைனான்ஸ் தொழிலை முடித்துவிட்டு திரியாலத்தில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்தபோது ஆனந்தபாபுவை கீழே தள்ளி விட்டு சிவன் தான் வைத்திருந்த கத்தியால் ஆனந்தபாபுவை சரமாரியாக வெட்டினார். சிலம்பரசன் மற்றும் தங்கபாலும் இரும்பு ராடால் அடித்துள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே ஆனந்தபாபு பரிதாபமாக இறந்தார்.

3 பேருக்கு ஆயுள் தண்டனை

இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவன், சிலம்பரசன், தங்கபாலு ஆகிய 3 பேரையும் கைது செய்து திருப்பத்தூர் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு கூறப்பட்டது. மாவட்ட நீதிபதி மீனாகுமாரி விசாரணை நடத்தி 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

இவ்வழக்கில் அரசு தரப்பில் குற்றவியல் வக்கீல் பி.டி.சரவணன் ஆஜரானார்.


Related Tags :
Next Story