தாய் உள்பட 3 பேர் மாயம்


தாய் உள்பட 3 பேர் மாயம்
x

தாய் உள்பட 3 பேர் மாயம் ஆனார்கள்.

கரூர்

கரூர் மாவட்டம் புகழூர் ஹைஸ்கூல் வீதி அன்னை நகர் பகுதியை சேர்ந்தவர் ஹரிச்சந்திரன். இவரது மனைவி ரேகா (வயது 36). இவர்களது மகன் எபினேசன் (8). இவர்களுடன் ரேகாவின் அம்மா கீதாவும் (58) குடியிருந்து வருகிறார். இந்தநிலையில் ரேகாவிற்கும், ஹரிச்சந்திரனுக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. இதன் காரணமாக ரேகா கோபித்து கொண்டு தனது மகன் எபினேஷன், அம்மா கீதாவையும் அழைத்து கொண்டு வேலாயுதம்பாளையம் ரவுண்டானா அருகே பஸ் ஏறி சென்றுள்ளனர். வீட்டுக்கு வந்து ஹரிச்சந்திரன் மனைவி, குழந்தை மற்றும் மாமியாரை பார்த்துள்ளார். அவர்களை காணவில்லை. இரவு வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. இதன் காரணமாக ஹரிச்சந்திரன் உறவினர், நண்பர் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தேடிப் பார்த்து கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து ஹரிச்சந்திரன் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து 3 பேரையும் தேடி வருகின்றனர். ஹரிச்சந்திரனுக்கு ரேகா 2-வது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story