மது விற்ற பெண் உள்பட 3 பேர் கைது
மது விற்ற பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
விராலிமலை சுற்றுவட்டார பகுதிகளில் மதுவிற்கப்படுவதாக விராலிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி தலைமையிலான போலீசார் ராஜாளிப்பட்டி பகுதியில் ரோந்்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராஜாளிப்பட்டியை சேர்ந்த கலையரசன் மனைவி முத்துலெட்சுமி (வயது 49) என்பவர் அவரது வீட்டின் அருகே மதுபாட்டில்களை விற்பனை செய்ததை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் விராலிமலை தாலுகா செட்டியப்பட்டி பகுதியை சேர்ந்த துரைராஜ் (53) என்பவர் அவரது வீட்டின் அருகேயும், கலிங்கிகாட்டை சேர்ந்த நாகராஜ் (37) என்பவர் அவரது ஓட்டல் பின்புறமும் வைத்து மதுபாட்டில்களை விற்பனை செய்வதை கண்டறிந்து அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.