விபத்தில் தொழிலாளி உள்பட 3 பேர் காயம்
ஆத்தூர் அருகே விபத்தில் தொழிலாளி உள்பட 3 பேர் காயமடைந்தனர்.
ஆத்தூர்:
ஆறுமுகநேரி காணியாளன்புதூரைச் சேர்ந்த ராமன் மகள் முத்து பிரகாஷ் (வயது 26). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி அனுசுயா. இவர்களுக்கு வினோதினி என்ற 8 மாத குழந்தை உள்ளது.
நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் மனைவி, மகளுடன் முக்காணிக்கு முத்துபிரகாஷ் சென்றார். பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் 3பேரும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். ஆத்தூர் அடுத்துள்ள தலைவன்வடலி விலக்கு பகுதியில் வந்தபோது, திருச்செந்தூரிலிருந்து மதுரையை நோக்கிச் சென்ற கார் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த முத்துபிரகாஷ் உள்ளிட்ட 3 பேரும் காயமடைந்தனர். இவர்கள் ஆத்தூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்டிரைவரான மதுரை ஜோன்ஸ் புரம் இரண்டாவது தெருவை சேர்ந்த முருகன் மகன் வசந்தகுமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.