பெண் உள்பட 3 பேர் தற்கொலை
வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
மலைக்கோட்டை, ஆக.11-
வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
கத்தாரில் வேலை
திருச்சி - மதுரை ரோடு நத்தர்ஷா பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் பயாஸ் (வயது 25). இவர் கத்தார் நாட்டில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு திருச்சி வந்த அவர் இடுப்பு வலியால் அவதிப்பட்டு வந்தார்.
இதனால் மனம் உடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் மலைக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் சாவு
*சிறுகனூர் அருகே ஊட்டத்தூர் மேல தெருவை சேர்ந்தவர் செல்வம் மனைவி தனலட்சுமி (37). செல்வம் துபாயில் வேலை பார்த்து கொண்டு ஊருக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தனலட்சுமி வீட்டில் இருந்த எலி மருந்தை (விஷம்) தின்று மயங்கிய நிலையில் கிடந்தார். பின்னர் அவரை சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தனலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சிறுகனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர் தற்கொலை
*முசிறி அடுத்த சந்தப்பாளையம் ஆலமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தனபால் மகன் விஜய் (18). இவர் சம்பவத்தன்று மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த விஜய் பெற்றோர் அவரை கண்டித்தனர். இதனால் மனமுடைந்த விஜய் வீட்டிலிருந்த எலி மருந்தை (விஷம்) தின்று மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜய் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.