மது விற்ற பெண்கள் உள்பட 3 பேர் கைது


மது விற்ற பெண்கள் உள்பட 3 பேர் கைது
x

மது விற்ற பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர்

கரூர் மாவட்டம், தோகைமலை பகுதியில் சிலர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக தோகைமலை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. தகவலின்பேரில் போலீசார் தோகைமலை பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அப்பகுதியில் மது விற்ற ஊமையுடையானூரை சேர்ந்த காமராஜ்(வயது 54), அ.உடையாபட்டி கிழக்கு தெருவை சேர்ந்த தங்கவேல் மனைவி மாரியாயி(42), பேரூர் உடையாபட்டியை சேர்ந்த கன்னியம்மாள்(62) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story