மது விற்ற பெண்கள் உள்பட 3 பேர் கைது
மது விற்ற பெண்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் மேல கோவிந்தபுத்தூர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவல்படி மேல கோவிந்தபுத்தூர் மேல தெருவை சேர்ந்த வசந்தி (50) என்பவரது வீட்டிலும், அதேபோல் மேல கோவிந்தபுத்தூர் அருகே உள்ள சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்த வேம்பு (49) என்பவரது வீட்டிலும் சோதனை செய்தனர். அப்போது 2 பேரின் வீட்டில் இருந்தும் விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து வசந்தி மற்றும் வேம்பு ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.இதேபோல் உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தத்தனூர் குடிக்காடு கிராமத்தை சேர்ந்த கண்ணன்(41), நேற்று அப்பகுதியில் மது பாட்டில்களை விற்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து கண்ணனை கைது செய்து அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.