செய்துங்கநல்லூரில் கொலை முயற்சியில் வழக்கில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது
செய்துங்கநல்லூரில் கொலை முயற்சியில் வழக்கில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
செய்துங்கநல்லூரில் கொலை முயற்சியில் வழக்கில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
கொலை முயற்சி
நெல்லை மாவட்டம் திம்மராஜபுரத்தை சேர்ந்த முத்தையா மகன் சுடலைமுத்து (வயது 42), செய்துங்கநல்லூர் தாதன்குளம் பகுதியை சேர்ந்த தளவாய் மகன் முருகன் (25), சுடலைமுத்து மகன் மாயாண்டி என்ற மாயா (20) ஆகிய 3 பேரையும் கொலை முயற்சி வழக்கில் செய்துங்கநல்லூர் போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர்.
குண்டர் சட்டம்
இதனை தொடர்ந்து இந்த 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சுடலைமுத்து, முருகன், மாயாண்டி என்ற மாயா ஆகிய 3 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவு நகலை செய்துங்கநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினார்.
நடப்பு ஆண்டில் இதுவரை போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட 12 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 37 பேர் உட்பட 187 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.